மௌன அஞ்சலி – உடல் ஒப்படைப்பு

 


மௌன அஞ்சலி – உடல் ஒப்படைப்பு


பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் தோழர் ரமேஷ் தலைமையில், சிபிஐ(எம்) பந்தலூர் ஏரியா கமிட்டி சார்பாக மறைந்த தோழர் ஏ.கே. ரவி அவர்களுக்கு மருத்துவக் கல்லூரி வளாகம் முன்பு மௌன அஞ்சலி மற்றும் இரங்கல் நிகழ்வு நடைபெற்றது.


தொடர்ந்து, மருத்துவ மாணவ–மாணவிகளின் கல்விப் பயனுக்காக அவரது உடல் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினரிடம் மரியாதையுடன் ஒப்படைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள், பந்தலூர் ஏரியா கமிட்டி உறுப்பினர்கள், வர்க்க–வெகுஜன அமைப்புகளின் தோழர்கள்  கலந்து கொண்டனர்.


மேலும், தோழர் ஏ.கே. ரவி அவர்களின் இல்லத்திலும், இந்நிகழ்விலும் கலந்து கொண்டு மரியாதை செலுத்திய கூடலூர் கோட்ட நிர்வாகத்தினர், கோட்டாட்சியர் அவர்கள், நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர், தமிழக அரசு மற்றும் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் பந்தலூர் ஏரியா கமிட்டி சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் பீட்டர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்தி பிரிவு...

Post a Comment

0 Comments