மரணத்திற்குப் பின்னும் மனிதகுலத்திற்குப் பயன்படுவோம்! உடல் தானம் செய்துள்ளனர்


மரணத்திற்குப்பின்னும் மனித குலத்திற்கு பயன்படுவோம்! உடல் தானம் செய்துள்ளனர்


17 தோழர்கள்… ஒரே உயரிய நோக்கம்


மரணத்திற்குப்பின்னும் மனிதகுலத்திற்குப் பயன்படுவோம்!


17 தோழர்கள்… ஒரே உயரிய நோக்கம்… மருத்துவக் கல்விக்கான மகத்தான அர்ப்பணிப்பு!


சிபிஐ(எம்) பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பில், மருத்துவக் கல்வியின் வளர்ச்சிக்கும் எதிர்கால மருத்துவர்களின் பயிற்சிக்கும் உதவும் வகையில், 17 தோழர்கள் தங்களது உடலைத் தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை எடுத்துள்ளனர்.


இன்று பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியரின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர்,  தோழர் திராவிடமணி, பந்தலூர் டிஎஸ்பி, வட்டாட்சியர், நகரமன்றத் தலைவர், வணிகர் சங்கத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் முன்னிலையில், தோழர்கள் தங்களது உடல் தான உறுதிமொழிச் சான்றுகளை உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினர்.


இந்நிகழ்வில் டாக்டர் கதிரவன், சிபிஐ(எம்) நீலகிரி மாவட்டச் செயலாளர் தோழர் வி.ஏ. பாஸ்கரன், மாவட்டக் குழு செயற்குழு உறுப்பினர்கள் தோழர் யோஹன்னன் மற்றும் தோழர் ராஜன் ஆகியோரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.


உடல் தானம் என்பது மரணத்திற்குப் பின்னரும் சமூகத்திற்குச் செய்யும் மகத்தான பங்களிப்பு!


மருத்துவ மாணவர்களின் கல்விக்கு உதவி, எதிர்காலத்தில் உயிர்களைக் காக்கும் மருத்துவர்களை உருவாக்குவதில் பங்கெடுக்கும் இந்த உயரிய முயற்சி, மனிதநேயத்தையும் அறிவியல் சிந்தனையையும் சமூகத்தில் வளர்க்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.


தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் பீட்டர் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு...

Post a Comment

0 Comments