நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


 உதகை அரசினர் கலை கல்லூரி வளாகத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்தகுமார் மற்றும் கல்லூரியின் முதல்வர்  திரு எபினேசர்  கொடியசைத்து துவக்கி வைத்தனர்.


2500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்டனர். உதகை நகர முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பேரணியானது. உதகை மத்திய பேருந்து நிலையத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுடன் நிறைவடைந்தது.


இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளை  நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்


தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்திகளுக்காக பதிப்பாசிரியர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக்கதிர் செய்தி பிரிவு...



Post a Comment

0 Comments