தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 ஆண்டுகள் நிறைவு விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் 35 மரங்கள் நடும் விழா


தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 ஆண்டுகள் நிறைவு விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் 35 மரங்கள் நடும் விழாவானது வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த மரம் நடுவிழா     துணை வனப் பாதுகாவலர்  சுசுச த் புல்கல்   I.F. S., தலைமையிலும், நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. சீனிவாசன், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள்  சங்கத்தின் பநீலகிரி மாவட்ட  தலைவர் திரு.சகாயராஜா ஆகியோர் முன்னிலையிலும் அவர்களும் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 

இந்த விழாவின்போது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் திரு சகாயராஜ் அவர்கள் கூறுகையில் இன்றைய தினம் உலக இதய தினம் நம்முடைய  இந்த மரங்களின் உதவியால் மட்டுமே நாம் அனைவரும் சுவாசிக்கின்றோம் அப்படிப்பட்ட மரங்களை இன்றைய தினத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் நடுவதை அனுமதித்த மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் நமது சங்க நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் 


இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரியின் மாணவர்களை கொண்டு உலக இதய தினத்தை நினைவூட்டும் வகையில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது இதில் அரசு மருத்துவர்களும் அரசு செவிலியர் கல்லூரியின் மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர்.                   இந்த மரம் நடு விழாவில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி    நிலைய மருத்துவ அலுவலர் மரு. ரவிசங்கர், இதயவியல் இணை பேராசிரியர்  மரு. கிரிஷ் சைனி, மரு. சசிகுமார், மரு. மாரியப்பன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


மேலும் நீலகிரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் கூறியதாவது நாங்கள் நட்ட இந்த மரங்களை பாதுகாப்பதற்கு ஏதுவாக இந்த மரங்களை சுற்றி வேலி அமைத்து தருவோம் என்று தெரிவித்தனர். விழாவின் முடிவில் அடுத்த பத்து நாட்களில் மீண்டும் ஒரு சிறப்பு மருத்துவ முகாமை நடத்த திட்டமிட்டு விழா இனிதே நிறைவடைந்தது.


தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்திகளுக்காக அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்தி பிரிவு...

Post a Comment

0 Comments