யானை பிண்டத்தில் பிளாஸ்டிக் கழிவு சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை....
நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்த ஏலமன்னா பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று இட்ட பிண்டத்தில் பெருமளவிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவுகள் கலந்து இருப்பது கண்டறியப்பட்டு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனப்பகுதிகளுக்குள் சுற்றுலாப் பயணிகளாலும், உள்ளூர் உணவகங்கள் மற்றும் கடைகளாலும் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உணவு என நினைத்து யானைகள் உட்கொள்வதால், அவற்றின் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள், வனப்பகுதியையொட்டிய இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கடுமையாகக் கட்டுப்படுத்தவும், கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் வனத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் பீட்டர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்தி பிரிவு...

0 Comments