அண்ணல் காந்தியடிகளின் 158 வது பிறந்த நாள் விழா மற்றும் கதர் ஆடை விற்பனை துவக்க விழா

 


அண்ணல் காந்தியடிகளின் 158 வது பிறந்த நாள் விழா மற்றும் கதர் ஆடை விற்பனை துவக்க விழா

நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று பார் போற்றும் இந்தியாவின் தந்தை  மகாத்மா காந்தி அடிகளின் 158வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதகை சேரிங்கிராசஸில் அமைந்துள்ள மகாத்மா காந்தியாடிகளின் சிலைக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.பா. அவர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்


நம் இந்தியத்திருநாட்டின் விடுதலைக்காகவும் தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்க்கையினை மே முழுமையாக அர்பணித்த மகாத்மாவின் நினைவுகளைப்போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2:ஆம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் விழா இந்தியத்திருநாடு முழுவதும்கொண்டாடப்பட்டு வருகிறது அதில் இன்று நீலகிரி மாவட்டம் உதகை நகரில் சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள 


மகாத்மா காந்தியாடிகளின் சிலைக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாதண்ணீரூ இ.ஆ.பா கதர் துண்டை அணிவித்தும் மலர் மாலையை அணிவித்தும் இந்தியாவின் தேசத் தந்தைக்கு மரியாதை செலுத்தினார் உடன்  அரசுத் துறையை சார்ந்தவர்களும் காந்தியவாதிகளும் காங்கிரஸ் நிர்வாகிகளும் பிரமுகர்களும் தொண்டர்களும் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் திரளாக கலந்துக் கொண்டு தேசத்தந்தைக்கு மரியாதையும் செலுத்தினார்கள் அதற்குப்பின்  சேரிங் கிராஸ் பகுதியில் அமைந்துள்ள கதர் வஸ்திரலாயத்திற்கு சென்ற நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்து விளக்கு ஏற்றி அண்ணலின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு அங்கு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்


தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்திகளுக்காக பதிப்பாசிரியர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்தி பிரிவு...

Post a Comment

0 Comments